கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டின்பேரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் எந்த இலக்குகள் தாக்குதல்களுக்கு வரம்பற்றதாக இருக்கும் என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதிஅரேபியாவின் ரியாத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
The post உக்ரைனில் போர் நிறுத்தம் சவுதியில் அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.