அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு எதிரொலி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 4 பேர் பலி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கில் நடந்த போரை காரணம் காட்டி ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே இரவில் நடந்த தாக்குதல்களுக்கான முக்கிய இலக்கு கீவ் பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பாக இருந்தது என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா சுமார் 430 டிரோன்களையும், 68 ஏவுகணைகளையும் ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது. 4 மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புக்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories: