துருக்கியில் நில நடுக்கம்

அங்காரா: துருக்கியில் நேற்று 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. துருக்கியில் உள்ள டோகாட் மாகாணத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. அதிகாலை 3.35மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அருகில் இருந்த மாகாணங்களிலும் உணரப்பட்டது. குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாலைகளிலும் கார்களிலும் நேரத்தை கழித்தனர்.

Related Stories: