அமெரிக்காவில் தங்கி இருக்கும் சோமாலியர்களை நாடு கடத்த நீதிமன்றம் தடை

பாஸ்டன்: சோமாலியாவில் ஆயுத படைகளுக்கும், அல் ஷபாய் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்தாலும் அங்கு நிலைமை மேம்பட்டுள்ளதாக கூறி, அமெரிக்காவில் உள்ள சோமாலியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்கா மார்ச் 17ம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வருவதாக கூறியிருந்தது. வருகின்ற செவ்வாய் கிழமையுடன் இந்த காலக்கெடு முடியவுள்ள நிலையில், சோமாலியாவில் இருந்து குடியேறியவர்களுக்கு தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து ரத்து செய்யப்படுவதை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து ரத்து காலாவதியாக அனுமதித்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பு காவல் மற்றும் நாடு கடத்தல், சோமாலியாவிற்கு அனுப்பப்பட்டால் உடல் ரீதியான வன்முறை குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கட்டாயமாக பிரித்தல் உள்ளிட்ட ஆபத்துக்களை எதிர்கொள்வார்கள் என்று நீதிமன்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: