சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் பதிலுரையில் சதம் வாங்கியிருக்கும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான லேப்டாப் வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி! யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத ஆல்ரவுண்டர் தமிழ்நாடு பட்ஜெட் 2025 அளித்து, பதிலுரையிலும் சதம் வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகள்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு பட்ஜெட் பதிலுரையில் சதம் வாங்கியிருக்கும் நிதி அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.