சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலம்

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலம் ஆகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி எழுப்பிய கேள்விக்கு சென்னை ஐ.ஐ.டி. பதில் அளித்துள்ளது. எஸ்.சி.-15%, எஸ்.டி.-7.5%, ஓ.பி.சி.-27% ஆகிய ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி |நியமனம் செய்யப்படுவதாக ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. 2019 முதல் பின்பற்றப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை ஐ.ஐ.டி. தரவில்லை.

The post சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: