ஈரானில் உள்ள இந்தியர்களை மார்ச். 14க்கு மேல்தான் மீட்க முடியும் : ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு விளக்கம்

மதுரை : ஈரானில் உள்ள இந்தியர்களை மார்ச். 14க்கு மேல்தான் மீட்க முடியும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குமரி மாவட்டதின் 88 பேர் உள்பட 600 மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றக் கிளையில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஈரானில் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவை மூடப்பட்டு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது; மார்ச் 14க்கு மேல் தான், விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என தெரிகிறது; இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பான சூழல் நிலவினால் மீட்டு விடுவோம்,” என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related Stories: