தனிச் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு, ஊராட்சிக்கு உட்பட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை க.வளர்மதி, தனது சமூக வலை தளப் பக்கத்தில் கடந்த 4.11.2024ல் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை தங்கள் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதில், எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் படிக்கின்றனர். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல் கழித்தல், பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளன. அவர்களி்ன கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன் பேரில் அந்த பள்ளிக்கு சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அந்த பள்ளியில் மாணவரின் சரளமான வாசிப்பு மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களை பெற்றிருந்ததையும் நேரில் ஆய்வு செய்து கண்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்பேரில், தமிழகத்தில் 4552 பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் பெறப்பட்டு, அதில் குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,
மக்கள் மன்ற பரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இந்த செயலை நடைமுறைப்படுத்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஏப்ரல் முதல் வாரம் மற்றும் இரண்டாவது வாரத்தில் ஆய்வு செய்யும் வகையில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 4552 பள்ளிகளில் செயல்படுத்தவும், பள்ளிப் பார்வையின்போது தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி நடைமுறைப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாணவர்களின் கற்றல், வாசிப்பு திறன்களை ஆய்வு செய்ய தயார் நிலையில் பள்ளிகள் appeared first on Dinakaran.