இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டது. ஜார்ஜியா ப்லிம்மர் 46 ரன்னுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் சுசி பேட்ஸ் மற்றும் இலங்கை கேப்டன் சமரி அத்தப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.
The post மகளிர் டி 20 கிரிக்கெட் 3வது போட்டி மழையால் ரத்து: இலங்கை-நியூசி.க்கு கோப்பை பகிர்ந்தளிப்பு appeared first on Dinakaran.