லிவர்பூல்: ஃபெதர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் நிக் பால், அயர்லாந்து வீரர் டி.ஜே.டோஹெனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். யுனைடெட் கிங்டமின் லிவர்பூல் நகரில் நேற்று முன்தினம் நடந்த குத்துச் சண்டை போட்டியில், யுனைடெட் கிங்டமை சேர்ந்த தற்போதைய ஃபெதர்வெயிட் குத்துச் சண்டை சாம்பியன் நிக் பால் (28), அயர்லாந்து குத்துச் சண்டை வீரர் டி.ஜே.டோஹெனி (38) மோதினர். போட்டியின் 9, 10வது சுற்றுகளில் நிக் பாலின் சரமாரி குத்துக்களை சமாளிக்க முடியாமல் டோஹெனி திணறியதை அடுத்து டோஹெனியின் பயிற்சியாளர் இடையில் புகுந்து போட்டியை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து நிக் பால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டபிள்யுபிஏ ஃபெதர்வெயிட் சாம்பியன் பட்டத்தை நிக் பால் தக்க வைத்தார். இந்த வெற்றியின் மூலம் நிக் பால் தொடர்ச்சியாக 22 முறை வெற்றிகளும் ஒரு டிராவும் பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
The post ஃபெதர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த நிக் பால்: டோஹெனியை வீழ்த்தி அபாரம் appeared first on Dinakaran.