புது லுக்கில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளன. அயலான் படம் தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பாராஜின் ஜிகர்தண்டா என 2 படங்களுடன் மோத உள்ளன. அதேபோல் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கருடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தன் அடுத்த படமான எஸ்கே 21 படத்தில் ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் பணியாற்ற உள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தின் பூஜை படங்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்துக்கான புது கெட் அப்பில் சிவகார்த்திகேயன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்ட் ஆகி வருகின்றன. அடர்த்தியான தாடி வளர்த்து, சிவகார்த்திகேயன் உடல் எடை கூட்டியும், தன் புது ஹேர்ஸ்டைலை மறைத்தும் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

The post புது லுக்கில் சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: