ஆங்கில படத்தில் நடிக்கிறார் சமந்தா

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா என்பவர் ஹீரோவாக நடிக்கும் ஆங்கில படம் ‘சென்னை ஸ்டோரி’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை பிலிப் ஜான் என்பவர் இயக்க உள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹீரோ தனது தாயின் மரணத்தை அடுத்து இந்தியாவில் உள்ள தனது மூதாதையர்களை பார்ப்பதற்காகவும், தனது தாயாரிடம் இருந்து பிரிந்த தந்தையை கண்டுபிடிப்பதற்காகவும் இந்தியா வருகிறார்.

சென்னையில் அவர் சமந்தாவை சந்திக்கும் நிலையில் சென்னையில் உள்ள கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் ஆகியவற்றை பார்த்து அவர் ஆச்சரியப்படுகிறார். அவருக்கு சமந்தா மீது காதல் ஏற்படுகிறது. இருவருமே காதல் வயப்பட்டு, இருவரும் சேர்ந்து நாயகனின் தந்தையை கண்டுபிடிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன? தந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்கிறார் பிலிப் ஜான்.

The post ஆங்கில படத்தில் நடிக்கிறார் சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: