கேரக்டர் தேர்வில் கவனமாக இருப்பேன்: துஷாரா உஷார்

சென்னை: ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். இப்போது அருள்நிதி ஜோடியாக கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியது: ​​எனது படங்கள், கேரக்டர் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம். திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண்.

நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் அதிகமாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் நன்றாக படமாக்கியுள்ளார்.

The post கேரக்டர் தேர்வில் கவனமாக இருப்பேன்: துஷாரா உஷார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: