ராவணாசுரா- ஓடிடி விமர்சனம்

தெலுங்கு ஆக்‌ஷன் ஹீரோ ரவிதேஜா தயாரித்து நடித்துள்ள படம் இது. கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற இப்படம், தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. வழக்கமான பழிவாங்கும் கதைதான். தனது குடும்பத்தை அழித்த வில்லன்களைக் கொடூரமான முறையில் பழிவாங்குகிறார், ரவிதேஜா. அதற்கு அவர் நவீன மேக்கப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். போலீஸ் கண்ணில் மண்ணைத்தூவி, எந்தவொரு தடயமும் இல்லாமல் வில்லன்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது கதை.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் படங்களில் வருவது போல் டாக்டர், வக்கீல், போலீஸ் அதிகாரி, அமைச்சர் என்று ரவிதேஜா சகட்டுமேனிக்குப் பழிவாங்குகிறார். கூடுதல் ஸ்பெஷலாக ஹீரோயின் மேகா ஆகாஷையும் போட்டுத்தள்ளுகிறார். வழக்கமான ஆர்ப்பாட்டங்கள், ஸ்டைல், பன்ச் டயலாக்குகள் என்று, ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா வேலைகளையும் ரவிதேஜா செய்துள்ளார். கடைசி 15 நிமிடம் வரை ரவிதேஜாவை வில்லனாகவே நம்பவைத்து, பிறகு ஹீரோவாக்கும் திரைக்கதையை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார், இயக்குனர் சுரேந்தர் வர்மா. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.

The post ராவணாசுரா- ஓடிடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: