இணைச் செயலாளர் சு.கோபிநாத், எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி இயக்குனர் டி.சபரிநாத், எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் வி.சாய் சத்யவதி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் வரவேற்றார்.விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 350 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘பட்டங்கள் பல பெறினும் முதல் பட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வில் மேன்மையுற அனைவரும் தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும். நுண்ணறிவைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். அறிவைப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அது மேன்மையுறும். மேலும் இளைஞர்கள் உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெற்றிகரமான வாழ்க்கையை வடிவமைப்பதில் விடாமுயற்சி, அறிவு மற்றும் குணநலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’’ என்றார். விழாவில் எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி ஆலோசகர் சாலிவாகனன், எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் மா.விஜயகுமார் நன்றி கூறினார்.
The post எஸ்ஏ கலை-அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: ரேங்க் மாணவர்களுக்கு ரொக்க பரிசு appeared first on Dinakaran.
