நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, பாரத வெண்புறா கலை இலக்கிய பேரவை சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இறந்த நாடக கலைஞர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி அளிக்க வேண்டும். நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு நிறுவன தலைவர் கதிர்வேலு தலைமை வகித்து பேசினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நாடக கலைஞர்கள் கலந்து கொண்டு, கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.
The post நாமக்கல்லில் கலை இலக்கிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
