திருச்செங்கோடு, மார்ச் 4: ஆத்தூர், தலைவாசல், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 37 மூட்டை எள்ளை ஏலத்துக்கு கொண்டுவந்தனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். ரூ.3.90 லட்சத்திற்கு எள் விற்பனையானது. கருப்பு ரகம் கிலோ ரூ.145 முதல் ரூ.175 வரையிலும், சிவப்பு ரகம் ரூ.119 முதல் ரூ.122 வரையிலும், வெள்ளை ரகம் ரூ.127.70 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 37 மூட்ைட எள் ரூ.3.90 லட்சத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து பருத்தி ஏலம் நடந்தது. பட்லூர், செல்லிபாளையம், உஞ்சனை, குமாரபாளையம், களியனூர், சங்ககிரி, பரமத்திவேலூர், இறையமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 43 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டுவந்தனர். ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ரூ.5,560 முதல் ரூ.8,060 வரையிலம், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ரூ.10,269 முதல் ரூ.10,371 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ரூ.90 ஆயிரத்தக்கு பருத்தி ஏலம் போனது. நேற்று கூட்டுறவு சங்கத்தில் பருத்தி மற்றும் எள் ஆகியவை ரூ.4.80 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
