அண்ணமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

 

திருச்செங்கோடு, மார்ச் 9: திருச்செங்கோடு மோளியப்பள்ளியில், அண்ணமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செங்கோடு தாலூகா மோளியப்பள்ளி பெரியகாண்டி அம்மன், அண்ணமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி பெரிய காண்டியம்மன் உருவம் புதிதாக வடிவமைக்கப்பட்டும், அண்ணமார் சுவாமிகள் பொன்னர், சங்கர், மாயவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டு கணபதி, சப்த கன்னிமார் அம்பிகைக்கு ராஜகோபுரம், சாலக்கிரக கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று, நான்காம் கால பூர்ணாகுதி நடந்து தீர்த்த கலசங்கள் வலம் வந்தன. இதனை தொடர்ந்து பெரிய காண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகமும், இதனை அடுத்து அனைத்து சுவாமிகளின் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: