நாமக்கல் கோயில்களில் நடை அடைப்பு

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு மூடப்படும். மாலையில் 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.20 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதையொட்டி பிற்பகல் 1.30 மணி அளவில் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில் நடைசாத்தப்பட்டது. பிற்பகலுக்கு மேல் கோயிலுக்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இன்று (4ம்தேதி) வழக்கமாக செய்யப்படும் பூஜைகளுக்கு பின், காலை 7 மணிக்கு கோயில்களில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

Related Stories: