நாமக்கல், மார்ச் 9: நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தலைமையில், பரமத்திவேலூர் தாலுகா, வேலூர் வாரச்சந்தையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர்,
நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, 2 மேசை தராசுகள், 22 மின்னணு தராசுகள், 4 ஊற்றல் அளவைகள், 2 படிகள் மற்றும் 5 எடை கற்கள் ஆகியவை உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மற்றும் தரப்படுத்தப்படாத 35 அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இனிவரும் காலங்களில், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், முத்திரையிடாமல் எடையளவு இயந்திரங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
