நாமக்கல், மார்ச் 10: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மற்றும் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மக்கள், அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் அமைந்து உள்ளது. கோவில் உள்ள சாலையின் இருபுறமும் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே கோவில் அருகில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை
- நாமக்கல்
- மக்கள் குறை தீர்க்கும் நாள்
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- விடுதலைப் புலிகள்
- தமிழ்
- தமிழ்நாடு
- Senthamangalam
- தட்டகிரி முருகன்
