திருச்செங்கோடு, மார்ச் 3: திருச்செங்கோடு அரத்தநாரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், செங்கோட்டு வேலவர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையை சுற்றி, 7 கிமீ தூரம் கிரிவலப்பாதை உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கிரவலம் செல்ல வந்திருந்தனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக போடப்பட்டிருந்த பேவர் பிளாக் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கலவை சாதம், குடிநீர், டீ, காபி, பானகம் ஆகியவற்றை வழங்கினர். அருள்மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மாசி மகம் விழா
- திருச்செங்கோடு
- மாசி மஹம் திருவிழா
- திருச்செங்கோடு ஆராதநாரீஸ்வரர் கோவில்
- பிரபுக்கள்
- ஆராதனரீஸ்வரர்
- ஆதிகேசவா
- பெருமாள்
- செங்கோட்டு வேலவர்
- திருச்செங்கோடு,
- நாமக்கல் மாவட்டம்…
