10 தேர்தல்களில் தோல்வி அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது: டிடிவி. தினகரன் பேட்டி

நெல்லை: நெல்லையில் அமமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் அமமுக தேர்தலை சந்திக்கும். அதிமுக தற்போது பலவீனம் அடைந்துவிட்டது.

இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா காலத்தோடு முடிந்து விட்டது. எனவே தற்போது அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் (எடப்பாடி), தங்களை ஜெயலலிதா என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். அது வெறும் மாயபிம்பம். கடந்த 10 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 10 தேர்தல்களில் தோல்வி அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது: டிடிவி. தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: