இந்தியா தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்த விராட் கோஹ்லியும் 11 ரன்னில் அவுட்டானார். பின் ஷ்ரேயாஸ் ஐயரும், அக்சர் படேலும் ஜோடி சேர்ந்து அடித்து ஆடினர். இந்த ஜோடி 98 ரன் குவித்த நிலையில் அக்சர் படேல் 42 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் 79 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்தோரில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் சிறப்பாக ஆடி 45 ரன் சேர்த்து அவுட்டானார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 249 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 42 ரன்கள் தந்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
அதையடுத்து 250 ரன் என்ற எளிய இலக்குடன் நியூசி களமிறங்கியது. துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 6, வில் யங் 22 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்தோரில் கேன் வில்லியம்சன் மட்டும் சிறப்பாக ஆடி 81 ரன் எடுத்தார். 45.3 ஓவரில் நியூசி 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. 42 ரன் தந்து 5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன்.
The post ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி : ஏ பிரிவில் முதலிடம் appeared first on Dinakaran.
