கரூர், பிப். 17: 29 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது, மினி பஸ் இயக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்து பயனடையலாம்.பிப். 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழகம் முழுதும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம் 2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 29 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்கள் தொடர்பான விரிவான விபரங்களை கரூர் மாவட்ட அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post மினி பஸ் இயக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்து பயனடையலாம் appeared first on Dinakaran.
