கிருஷ்ணராயபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டவர் கைது

கிருஷ்ணராயபுரம்; மார்ச். 12: கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் போட்டவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணவாசி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாயனூர் இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் மணவாசி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மணவாசி இந்திரா காலனி பகுதியை சேர்ந்த குப்புசாமி (55) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் பானையில் ஊறல் போட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் பானையை உடைத்து அதிலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்தனர். இது தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: