கரூர், மார்ச். 14: கரூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-மிமி (தொகுதி-மிமி மற்றும் மிமிகி) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், வருகின்ற 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் (முற்பகல் தாள்-2 மற்றும் பிற்பகல் தாள்-1) தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்காணும் தேர்வில் முற்பகல் 108 தேர்வாளர்களும் மற்றும் பிற்பகல் 111 தேர்வாளர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு (பிணீறீறீ ஜிவீநீளீமீt) உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
