கரூர், மார்ச் 16: தான்தோன்றிமலை என்.ஆர்.எம். கோவிந்தன் ரூக்மணி மெட்ரிக் குலேஷன் பள்ளி 28வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளிச் செயலாளர் என். ஆர்.எம். பி சிவசண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் நிறைமதி கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
முன்னதாக பள்ளி தாளாளர் ப.சௌந்தரராஜன் வரவேற்றார். பள்ளி ஆலோசகர் சுப்பிரமணியம் மற்றும் முதல்வர் வை தங்கவேல், இருபாலர் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர். பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
