கரூர்,மார்ச்.17: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமார் தலைமை வகித்தார்.
கலெக்டர் ரவிக்குமார் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 134. அரவக்குறிச்சி 135, கரூர் 136, கிருஷ்ணராயபுரம் மற்றும் 137, குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது.
