கிருஷ்ணராயபுரம், மார்ச். 16: கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்தார்.
இதில் 156 வழக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 500க்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்ட சட்ட பணிக்குழுவின் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் வடிவேல், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர் தங்கதுரை மற்றும் மகளிர் வழக்கறிஞர் அபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
