ஹார்மோன் ஊசி விவகாரம் மவுனம் கலைத்த ஹன்சிகா

மும்பை: சிறிய வயதிலேயே ஹீரோயினாகிவிட்ட ஹன்சிகாவிற்கு அவருடைய அம்மா ஹார்மோன் ஊசி போட்டார் என்றும் அதனால்தான் அவர் சிறிய வயதிலேயே உடல் வளர்ச்சியை பெற முடிந்தது என்றும் சில சமூகஊடகங்களில் தகவல்கள் பரவியது. ஹன்சிகா தனது ஆரம்பக்கட்டத்தில் வைக்கப்பட்ட இந்த வதந்திக்கு தற்போதுதான் பதிலளித்துள்ளார். ‘அந்த தகவலில் உண்மையில்லை. ஊசிக்கு பயப்படும் நான், இதுவரை டாட்டூ கூட போட்டதில்லை. பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற வதந்திகள் பரவுகின்றன. என்னுடைய ஆரம்பக் கட்டத்தில் இதுபோன்ற வதந்திகளால் மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று நடிகை ஹன்சிகா பதிலளித்துள்ளார். ஹன்சிகாவிற்கு ஹார்மோன் ஊசி செலுத்தியது குறித்து நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவருடைய அம்மா மோனா ஹன்சிகா ‘என் மகள் வளர வேண்டும் என்பதற்காக ஊசி போட்டதாக என்மீது குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் ஒரு தாய் இப்படி செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

The post ஹார்மோன் ஊசி விவகாரம் மவுனம் கலைத்த ஹன்சிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: