மேலும் ரிக்டரில் 3 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் பதிவானதால் எரிமலை வெடிக்கலாம் என மக்கள் அச்சம் அடைந்தனர். படிப்படியாக அதிகரித்த நிலநடுக்கத்தின் திறன் பிப்.6-ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவானது. இந்த நிலையில், சான்டோரினி தீவில் கிரீஸ் நாடு அவசர நிலையை பிரகடனம் செய்ததை அடுத்து அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஆயினும் அரசு மீட்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவற்றுடன் அவசர கால உதவிக்கு தயாராக உள்ளனர். மேலும் டிரோன்கள் மூலம் மக்கள் வசிப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர்.
The post பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழும் என்ற அச்சத்தில் கிரீஸ் நாட்டு தீவில் இருந்து வெளியேறிய சுற்றுலா பயணிகள்!! appeared first on Dinakaran.