வாஷிங்டன்: ‘ஈரானுக்கு எதிரான போரை நல்ல மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது’ எனக்கூறி அமெரிக்காவின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் நேற்று தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தத்தின் காரணமாகவே நாங்கள் இந்த போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது. ஈரானுக்கு எதிராக நடக்கும் போரை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது’’ எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளைமாளிகை உடனடியாக எந்த கருத்தும் கூறவில்லை.
‘ஈரான் போரை ஆதரிக்க முடியாது’ அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா
- அமெரிக்க தீவிரவாத மையம்
- வாஷிங்டன்
- ஜோ கென்ட்
- பயங்கரவாத எதிர்ப்புக்கான அமெரிக்க தேசிய
- ஈரான்
- தேசிய தீவிரவாதத்தை எதிர்ப்பு
- ஐக்கிய நாடுகள்
