வீட்டிற்கு நடிகர் வந்து சென்ற சில மணி நேரத்தில் துருக்கி மாடல் அழகி சடலமாக மீட்பு: கொலையா? என்பது குறித்து விசாரணை

 

இஸ்தான்புல்: பிரபல துருக்கி ஃபேஷன் டிசைனர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் ஒளிபரப்பான ‘இதுவே எனது ஸ்டைல்’ எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஃபேஷன் டிசைனரான மாடல் அழகி ஆய்செகுல் எரஸ்லான் (27), நேற்று இஸ்தான்புல் நகரின் காகிதேன் பகுதியில் உள்ள தனது டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட டைரி போன்ற குறிப்பில் ஆய்செகுல் உருக்கமாக சில தகவல்களை எழுதியுள்ளார். அதில், ‘எனது சிறுவயது மனக்காயங்கள், நான் சந்தித்த வன்முறை மற்றும் அன்பின்மை குறித்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் ஒழுக்கமானவராக இருந்தேன். யாருக்கும் நான் தீங்கு செய்யவில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடிகர் சுனய் குருதுலுஸ் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து சென்றது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘நாங்கள் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தோம், ஆனால் நான் அங்கிருந்து கிளம்பும்போது அவர் உயிருடன்தான் இருந்தார்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். வீட்டில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் சில தடயங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது உடல் பிதேரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: