எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் இனி வாரம் 4 நாள் மட்டுமே வேலை: புதன்கிழமை பொதுவிடுமுறை

கொழும்பு: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் வாரம் 4 நாள் மட்டுமே வேலை வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் நான்கு நாள் வேலை வாரம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒரு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு நிறுவனங்களும் பள்ளிகளும் ஒவ்வொரு புதன்கிழமையும் மூடப்பட்டிருக்கும். மூன்று கச்சா எண்ணெய் கப்பல் சரக்குகள் இலங்கை வந்து சேர்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி கூறுகையில்,’இலங்கையில் ஏப்ரல் 23 வரை போதுமான பெட்ரோலும், ஏப்ரல் 13 வரை போதுமான டீசலும் கையிருப்பில் உள்ளன’ என்றார்.

Related Stories: