உடுமலை, ஜன.17: உடுமலை அருகே உள்ள ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நடந்தது.
உடுமலை அருகே பெதப்பம்பட்டி உள்ள சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலாக்கோவில் என்று அழைக்கப்படும் ஆல்கொண்டமால் கோயில் அமைந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டாலோ அல்லது விபத்துகளில் ஊனமடைந்தால் நோய் நிவர்த்தி ஆவதற்காக மாலக்கோயிலில் வேண்டிக் கொள்வர். கால் கால்நடைகள் நோயிலிருந்து மீண்டழுந்தபோது பொங்கல் திருநாளின்போது 3 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் நேர்த்திக்கடனாக கன்றுக்குட்டி, உருவார பொம்மைகளை மாலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது பக்தர்களின் வழக்கம்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடந்தது. இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து சாமிதரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தங்கள் நேர்த்திக்கடனாக கன்று குட்டி, உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர்.இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. பகல் 11 மணி அளவில் சாமிக்கு விசேஷ அலங்காரம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனையும் மாலை 6 மணிக்கு மகாபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை இரவு 9 மணிக்கு சுவாமி திருவிதி உலா மகா தீபாராதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் அமரநாதன், கோவில் செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழாக்கான ஏற்பாடுகளை குடிமங்கலம் ஒன்றியம் கல்லாபுரம், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொண்டு வந்தனர். பொள்ளாச்சி, உடுமலை ,திருப்பூர் பல்லடம் ஆனைமலை மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாலக்கோவிலுக்கு நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
The post ஆல்கொண்டமால் கோவில் திருவிழா; உருவார பொம்மைகள் செலுத்தி வழிபாடு appeared first on Dinakaran.