அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

 

திருப்பூர், மார்ச் 13: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கேயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையாளர் அமித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: