உடுமலை, மார்ச் 13: தமிழ்நாடு கல்குவாரி கட்டுமானம் மற்றும் உடல் உழைப்போர் சங்கத்தின் சார்பில் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். அப்பாஸ், ரமேஷ், தங்கவேல், வழக்கறிஞர் கலைச்செல்வன், செல்வி தங்கமணி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். சக்திவேல், கார்த்தி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
