12ம் வகுப்பு மாணவனை தாக்கிய 4 பேர் கைது

 

திருப்பூர், மார்ச்17: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (18). இவர் கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் கோவில்வழி பகுதியைச் சேர்ந்த லோகேஸ் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நின்ற குருநாதனை அங்கு வந்த லோகேஷ் முன் விரோதம் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக்கூறி கருவம்பாளையம் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த லோகேசின் நண்பர்களான பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் (18), விஷ்ணு வர்ஷன் (24) மற்றும் கோவில்வழியைச் சேர்ந்த அரிஹரன் (18) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

Related Stories: