கலெக்டர் அலுவலகத்தில் பேரிகார்டுகள் அமைக்கும் பணி தொடக்கம்

திருப்பூர், மார்ச் 20: சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிகார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தொடர்பான பணிகளை அரசு அதிகாரிகள் வெகு விரைவாக செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் தங்களுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் 10 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில் அதற்கான பேரிகார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான பேரிகார்டுகளை போலீசார் இறக்கி வைத்து அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘மனைவியை விட்டு சென்றால் அவள் என்ன செய்வார்’

Related Stories: