உபரிநீரை குளத்தில் நிரப்ப வேண்டும்

திருப்பூர், மார்ச். 12: திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்எல்ஏ, நேற்று மாவட்ட கலெக்டர் மனிஷிடம், கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:திருப்பூர் மங்கலம் ஊராட்சி வேட்டுவபாளையத்தில் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டை உள்ளது. குளத்தின் வடக்கு பகுதியில் அரை கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. மழைக்காலங்களில் தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் ஆற்றில் சென்று விடுகிறது. அந்த நீரினை குழாய் மூலம் அருகில் உள்ள வேட்டுவபாளையம் குளத்தில் நிரப்பினால் சுற்று வட்டார ஊராட்சிகளான மங்கலம், பூமலூர், இடுவாய் ஆகிய ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு காண்ட விவசாய பூமி பயன்பெறும். இத்திட்டத்தினை நிறைவேற்றித்தர திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் முன்வந்துள்ளது. அதற்கு செலவாகும் முழுத்தொகையையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

சாமளாபுரம் பேரூராட்சி பெரியகுளத்தை தூர்வாரி மண்மேடுகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தி, குளக்கரையை பலப்படுத்த, மாவட்ட நிர்வாகத்தால் கடந்த முறை அனுமதியளிக்கப்பட்டது. அதை போல் இத்திட்டத்திக்கும் துறைரீதியான ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட குளத்தில் நீர் நிரப்பி விவசாய பயன்பாடு மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் நிர்வாக அனுமதி வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டது.இதில் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: