திருப்பூர், மார்ச் 18: திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (30). இவர் அதே பகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் உள்ள லாரியில் இருந்து பேட்டரிகள் காணாமல் போனது. இதனை தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் தனது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை, ஆய்வு செய்து பார்த்த போது, ஆக்டிங் டிரைவராக பணியாற்றிய வந்த விஜயாபுரத்தை சேர்ந்த முத்துகாமாட்சி (49), நல்லூரை சேர்ந்த முனியப்பன் (39). ஆகிய இருவரும் லாரியில் இருந்த பேட்டரிகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து சந்தானகிருஷ்ணன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முத்துகாமாட்சி, முனியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
