பல்லடம், மார்ச் 20: பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி தர்மேந்திரசிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று முன்தினம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிவாவி, அய்யம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள நடைபாதை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பல்லடம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தாசில்தார் கோவிந்தசாமி, தேர்தல் துணை தாசில்தார் அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
