வேலாயுதம்பாளையம், ஜன.17: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் தமிழன் மன்றம் சார்பில் 57ம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கலை விளையாட்டு விழா நடைபெற்றது. கடந்த 14ம் தேதி தை முதல் நாள் செவ்வாய்க்கிழமை விளையாட்டு தீப ஒளி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணி அளவில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. 15ம் தேதி புதன்கிழமை மாட்டுப் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவர்களுக்கான கண்கட்டி கப்பு பொருத்துதல் ,ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிஸ்கட் சாப்பிடும் போட்டி ,பெண்களுக்கான பலூன் உடைக்கும் போட்டி, சிறுமியர்களுக்கான மூன்று கால் ஓட்டம், சிறுவர்களுக்கான மெதுவான சைக்கிள் ஓட்டுதல் (ஸ்லோ சைக்கிள் ரேஸ்) சிறுவர்களுக்கான வாழ் உருவும் போட்டி ,சிறுமியர்களுக்கான முறுக்கு கடிக்கும் போட்டி, சிறுவர், சிறுமிகளுக்கான முட்டுக்கு கீழ் பந்தடித்தல் போட்டி உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி முதல் இறுதி கட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கும்மி மற்றும் கோலாட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரிக்கரை விழா நடைபெற்றது. அப்போது காவிரி கரையில் அமர்ந்து தாங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பல்வேறு வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர் . அதனை தொடர்ந்து கலாச்சார உணவுத் திருவிழா நடைபெற்றது.இரவு 7 மணி அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள் .இரவு 9 மணி அளவில் தமிழர் மன்ற கலைக்குழுவும்,மகளிர் மன்ற கலைக்குழுவும் இணைந்து கலக்கல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அதேபோல் நடையனூர், கரைப்பாளையம், புன்செய் புகளூர், நானப்பரப்பு, தவுட்டுப்பாளையம், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம் ,அண்ணா நகர், காந்தி நகர் ,கூலக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு விழா நடைபெற்றது
The post வேலாயுதம்பாளையம் மறவாபாளையத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.
