வத்திராயிருப்பு, ஜன.9: வத்திராயிருப்பு அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். வத்திராயிருப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகாராஜபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகே வத்திராயிருப்பை சேர்ந்த நல்லதம்பி(22) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சா மற்றும் 350 ரூபாய், கேரி பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த ேபாலீசார், நல்லதம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வத்றாப் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.