புதுக்கோட்டை, மார்ச் 18: புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே, பொதுமக்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தடுப்புகளில் போக்குவரத்து விதிகள் மற்றும் எச்சரிக்கை விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில், அந்த விழிப்புணர்வுப் பலகைகளை முழுமையாக மறைக்கும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர போஸ்டர்கள் அதன் மீது ஒட்டப்பட்டிருந்தன. பொதுமக்களுக்குத் தெரிய வேண்டிய முக்கியத் தகவல்களை மறைத்து, அனுமதியின்றி ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களைக் கண்டு போக்குவரத்து காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகச் போக்குவரத்து காவல்துறையினர், அந்த போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர். மேலும், போஸ்டர் ஒட்டிய நபரை நேரில் வரவழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தனர். \\”உடனடியாக இந்தத் தடுப்புகளைச் சுத்தம் செய்து பழைய நிலைக்குக் கொண்டு வராவிட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
