வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

 

கந்தர்வகோட்டை, மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் பொதுமக்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை வட்டாச்சியர் பரணி முன்னிலை வகித்தார்.

Related Stories: