இலுப்பூர், மார்ச் 18: இலுப்பு அருகே உள்ள கோத்திரா பட்டியில் வைக்கோல் போரில் ஏற்பட்ட திடீர் தீயை இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இலுப்பூர் அருகே உள்ள கோத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த இரண்டு வைக்கோல் போர்களில் நேற்று திடீரென தீ பற்றி புகையுடன் எரிய தொடங்கியது. இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சு அடித்து வைக்கோலில் ஏற்பட்ட தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். பின்னர் முற்றிலுமாக அணைத்தனர்.
