கும்பகோணம், மார்ச் 18: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வருவாய் கோட்டாட்சியர் திருமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தல், பயமுறுத்துதல், ஆள்மாறாட்டம், வாச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் பிரச்சாரம் செய்வது, வாக்காளர்களை வாக்குசாவடிக்கு வாகனங்களில் அழைத்து வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது. ஒரு கட்சியின் போஸ்டர்களை மற்றொரு கட்சி அகற்ற கூடாது.
