செம்பனார்கோயில், மார்ச் 18: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கருவியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் காந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை சரியாக கண்காணிக்கின்றனரா, அவ்வாறு கொண்டு சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தார். பின்னர் கலெக்டர் காந்த் கூறுகையில், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 950 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநில எல்லையில் 2 சோதனைச் சாவடிகளில் 360 டிகிரி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணி க்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 3 சோதனை சாவடிகளிலும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
